×

வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் பாகுபலி யானை: மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க வனத்துறை திட்டம்

கோவை: மேட்டுப்பாளையத்தில் வாயில் காயத்துடன் சுற்றி வரும் பாகுபலி யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் 4-வது நாளாக போராடி வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் சுற்றிவைத்த பாகுபலி யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு அந்த யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து யானையை பிடித்து சிகிச்சை அளிக்க 4 நாட்களாக வனத்துறை போராடி வருகிறது.

பாகுபலி யானையை பிடிக்க நீலகிரி மாவட்டம் முதுமலை முகாமில் இருந்து வசீம், விஜய் என்ற 2 கும்கி யானைகள் மேட்டுபாளையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளன. யானைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு தயாராக உள்ள நிலையில் யானையை பிடிக்கும் பணியில் வேட்டைத்தடுப்பு காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாகுபலி யானை பிடிப்பட்ட உடன் காயத்தை ஆய்வு செய்தபின் பொள்ளாச்சி டாப்சிலிப் அல்லது முதுமலை யானைகள் முகாமுக்கு சிகிச்சைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காயத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் பாகுபலி யானை: மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க வனத்துறை திட்டம் appeared first on Dinakaran.

Tags : Govai ,Mettupalaya ,Dinakaran ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!